sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரே தவறை தொடர்ந்து செய்யும் ராகுல்: மன்னிப்பு கேட்க கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்

/

ஒரே தவறை தொடர்ந்து செய்யும் ராகுல்: மன்னிப்பு கேட்க கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்

ஒரே தவறை தொடர்ந்து செய்யும் ராகுல்: மன்னிப்பு கேட்க கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்

ஒரே தவறை தொடர்ந்து செய்யும் ராகுல்: மன்னிப்பு கேட்க கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்

7


ADDED : பிப் 02, 2026 10:49 PM

Google News

7

ADDED : பிப் 02, 2026 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஒரே தவறை தொடர்ந்துசெய்யும் காங்கிரஸ் எம்பி ராகுல், பார்லிமென்டை விட தான் உயர்ந்தவர் என நினைக்கிறார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

முன்னாள் ராணுவ தளபதி நரவனே எழுதி வெளிவராமல் உள்ள புத்தகத்தில் உள்ளது குறித்து லோக்சபாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் முயன்றதால் அமளி ஏற்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது: தேச பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது. தேச விரோத சக்திகளின் மொழியில் பேசி நாட்டின் பாதுகாப்பில் விளையாடக் கூடாது. தேச பாதுகாப்பை அரசியல் ஆயுதமாக மாற்றக்கூடாது. பார்லிமென்டில் அவதூறு பரப்பும் கருவியாக அதனை பயன்படுத்தக்கூடாது.

பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அனைவரும் விதிமுறைகளின்படியே பார்லிமென்ட் நடக்கும் என்றனர். விதிகளின்படியே பேச வேண்டும். சபாநாயகருக்க யாரும் சவால் விடுக்கக்கூடாது. ராகல் தொடர்ந்து ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறார்.சீன எல்லை விஷயம் குறித்து அவர் பேசுகிறார். 1959 மற்றும் 1962 ல் சீனா ஆக்கிரமித்த நிலங்களை காங்கிரஸ் திரும்ப கொண்டு வருமா?

இந்தியா ஜனநாய நாடு. விதிகளின்படியே செயல்படும். எந்த விதிமுறைகளையும் ராகுல் பின்பற்றுவது கிடையாது. பார்லிமென்டை விட தன்னை உயர்ந்தவர் என நினைக்கிறார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us