UPDATED : ஜூலை 08, 2024 07:00 PM
ADDED : ஜூலை 08, 2024 06:55 PM

இம்பால்: மணிப்பூர் கவர்னரை சந்தித்தார் காங்., எம்.பி. ராகுல்.
மணிப்பூரில் கடந்தாண்டு மே 3-ம் தேதி மெய்தி- கூகி பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. பலர் பலியாயினர். இங்கு ஓராண்டிற்கும் மேலாக வன்முறை நிலவி வருகிறது.
இந்நிலையில் பாராளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்.எம்.பி.யுமான ராகுல் இன்று இம்மாநிலத்திற்கு ராகுல் சென்றார். தலைநகர் இம்பாலில் உள்ள ஜிரிபாம் நிவாரண முகாமிற்கு சென்று, மக்களை ராகுல் சந்தித்தார்.
இந்நிலையில் அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார். பின்னர் கவர்னர் அனுஷ்யா உய்கியை சந்தித்து பேசினார்.
பின்னர் ராகுல் கூறியது, கவர்னரை சந்தித்து பேசினேன். உங்களுக்கு தேவையான உதவி செய்யவே இங்கு நான் வந்துள்ளளேன். இங்கு அமைதி திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்கான முயற்சி செய்வேன். இந்த விவகாரத்தினை யாரும் அரசிலாக்க வேண்டாம் என்றார்.