ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; தேர்தல் ஆணையம் மீண்டும் கிடுக்கிப்பிடி
ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்; தேர்தல் ஆணையம் மீண்டும் கிடுக்கிப்பிடி
ADDED : ஆக 09, 2025 10:10 PM

புதுடில்லி: பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.
கடந்த 2024 லோக்சபா தேர்தல் முதற்கொண்டு, அதன் பின் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டினார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் என அடுக்கடுக்கான புகார்களை கூறி, ஆவணங்களை வெளியிட்டார். அவரது இந்தக் குற்றச்சாட்டு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையம், தனது குற்றச்சாட்டுகள் குறித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தது.
ஆனால், குற்றச்சாட்டுகளை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய ராகுல் மறுத்துவிட்டார். ராகுலின் இந்த செயலை அடுத்து பாஜ உள்ளிட்ட ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில், பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக காங்கிரஸ் எம்பி ராகுல், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மீண்டும் தெரிவித்துள்ளது.