sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வீட்டில் ஆரஞ்சு ஜாம் தயாரித்த ராகுல், சோனியா: வீடியோ வைரல்

/

வீட்டில் ஆரஞ்சு ஜாம் தயாரித்த ராகுல், சோனியா: வீடியோ வைரல்

வீட்டில் ஆரஞ்சு ஜாம் தயாரித்த ராகுல், சோனியா: வீடியோ வைரல்

வீட்டில் ஆரஞ்சு ஜாம் தயாரித்த ராகுல், சோனியா: வீடியோ வைரல்

42


UPDATED : ஜன 01, 2024 10:35 AM

ADDED : ஜன 01, 2024 10:31 AM

Google News

UPDATED : ஜன 01, 2024 10:35 AM ADDED : ஜன 01, 2024 10:31 AM

42


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி., ராகுலும் அவரது தாயார் சோனியாவும் இணைந்து தங்கள் வீட்டில் ஆரஞ்சு ஜாம் தயாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Image 3517313

அந்த வீடியோவில், ராகுலும், சோனியாவும் அவர்களது தோட்டத்துக்குச் சென்று சிறிய ஆரஞ்சுப் பழங்களை பறித்து கூடையில் நிரப்பினர்.

Image 1214275

கூடை நிறைய பழத்தை எடுத்துக்கொண்டு இருவரும் சமையலறைக்கு வருகின்றனர். இருவரும் ஆரஞ்சுப் பழத்தை உரித்து சாறு எடுத்தனர்.

Image 1214274

பிரியங்கா யோசனை


பின்னர், ‛‛ இது தங்கை பிரியங்காவின் யோசனை. அவர் சொன்ன சமையல் முறையை பின் பற்றி இந்த ஜாமை நான் தயாரிக்கிறேன்” என்று குறிப்பிடும் ராகுல், அடுப்பில் பாத்திரம் வைத்து சமைக்க ஆரம்பித்தார்.

அப்போது ராகுல், ‛‛ பா.ஜ.,வினருக்கும் ஜாம் கிடைக்கும்” என்று சொல்ல, அதற்கு சோனியா “அவர்கள் இதை நம் மீது எறிந்துவிடுவார்கள்” என்கிறார்.

அதற்கு ராகுல், “அதனால் என்ன, மீண்டும் பழங்களை பறிப்போம்” என்று சொல்லிவிட்டு, இருவரும் சேர்ந்து சிரிக்கின்றனர்.

Image 1214276

பிடிக்காத விஷயம்


“ராகுலிடம் எனக்கு பிடிக்காத விஷயம், என்னைப் போலவே அவனும் பிடிவாத குணம் கொண்டவன். ஆனால், அன்பும் அக்கறையும் மிகுந்தவன்” என தன் மகனைப் பற்றி சோனியா புகழ்ந்து பேசுகிறார்.

Image 1214279

ஆரஞ்சு ஜாம் தயாரான பிறகு தாயும் மகனும் சேர்ந்து கண்ணாடிக் குடுவைகளில் அதை நிரப்புகின்றனர். அந்தக் குடுவைகளின் மேல், “சோனியா மற்றும் ராகுலிடமிருந்து அன்புடன்...” என்று எழுதப்பட்டுள்ளது.

ராகுலின் யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.






      Dinamalar
      Follow us