என்ன இப்படி தப்பு தப்பா அறிக்கை விடுறீங்க: ராகுலுக்கு புத்திமதி சொல்கிறார் மாயாவதி
என்ன இப்படி தப்பு தப்பா அறிக்கை விடுறீங்க: ராகுலுக்கு புத்திமதி சொல்கிறார் மாயாவதி
UPDATED : செப் 11, 2024 12:06 PM
ADDED : செப் 11, 2024 11:58 AM

லக்னோ: இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் தவறான அறிக்கைகளை வெளியிடுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது: ஆட்சியில் இல்லாதபோது, எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., ஆகிய சமூக மக்களை பற்றி பேசுகின்றனர். ஆனால் ஆட்சியில் இருக்கும்போது, அவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். இட ஒதுக்கீடு குறித்த ராகுலின் அறிக்கை தவறானது. மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த, காங்கிரஸ் ஆட்சியில் பதவி உயர்வுகளில் எஸ்சி/எஸ்டி இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்கவில்லை.
அது எல்லாம் புரளி!
நாட்டில் இடஒதுக்கீடு வரம்பை உயர்த்துவதாக அவர்கள் கூறுவது ஒரு புரளி. ஏனெனில் அவர்களின் நோக்கம் தெளிவாக இருந்திருந்தால், அவர்கள் ஆட்சியில் இருந்த போது இந்த வேலை நிச்சயமாக செய்யப்பட்டிருக்கும். காங்கிரஸ் ஓ.பி.சி., இடஒதுக்கீட்டையோ அல்லது எஸ்.சி, எஸ்.டி., இடஒதுக்கீட்டையோ முறையாக அமல்படுத்தவில்லை. ஆட்சியில் இல்லாத போது பெரிதாகப் பேசுகிறது என்பது இதிலிருந்து தெளிவாகிறது. மக்கள் இந்த சதியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு மாயாவதி கூறினார்.