sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'இண்டியா' கூட்டணி தலைவராக மம்தாவுக்கு ஆதரவு பெருகுகிறது!

/

'இண்டியா' கூட்டணி தலைவராக மம்தாவுக்கு ஆதரவு பெருகுகிறது!

'இண்டியா' கூட்டணி தலைவராக மம்தாவுக்கு ஆதரவு பெருகுகிறது!

'இண்டியா' கூட்டணி தலைவராக மம்தாவுக்கு ஆதரவு பெருகுகிறது!

17


UPDATED : டிச 10, 2024 10:11 PM

ADDED : டிச 10, 2024 04:44 PM

Google News

UPDATED : டிச 10, 2024 10:11 PM ADDED : டிச 10, 2024 04:44 PM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ' இண்டியா' கூட்டணிக்கு தலைமை தாங்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சரத்பவார், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரேயை தொடர்ந்து ராஷ்ட்ரீய ஜனதா தள லாலு பிரசாத்தும் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த முடிவு செய்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், 'இண்டியா' கூட்டணியை உருவாக்கின. திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த மெகா கூட்டணியில் இடம்பெற்றன. தலைமை குறித்து உரிய முடிவு எடுக்கப்படாதது, கூட்டணியில் விரிசல் என பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே லோக்சபா தேர்தலை இண்டியா கூட்டணி சந்தித்தது.

பேச்சு


எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் இண்டியா கூட்டணி அமர்ந்தது. அடுத்து நடந்த ஜம்மு - காஷ்மீர், ஹரியானா, மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல்களிலும் அக்கூட்டணி தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதால், அக்கட்சியின் எம்.பி., ராகுலின் தலைமையில் இண்டியா கூட்டணி செயல்படுவதாக கூறப்படும் நிலையில், தேர்தல் தோல்வி காரணமாக தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற பேச்சு எழுந்தது.

கருத்து வேறுபாடு

மேலும், அதானி விவகாரத்தில் பார்லிமென்ட்டை ராகுல் தலைமையில் காங்கிரஸ் முடக்கி வருகிறது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க பார்லிமென்ட் இயங்க வேண்டும் என திரிணமுல் கூறுகிறது. இது இரண்டு கட்சிகளுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டை எதிரொலித்தது.

ஆதரவு

இச்சூழலில் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அளித்த பேட்டியில், ' வாய்ப்பு கிடைத்தால் கூட்டணிக்கு தலைமை ஏற்க தயார் ', எனக்கூறியிருந்தார். மம்தாவின் கருத்து ' இண்டியா' கூட்டணியில் சலசலசப்பை ஏற்படுத்தியது. மம்தாவின் கருத்துக்கு சமாஜ்வாதி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., கட்சி - சரத்சந்திர பவார் உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்து இருந்தன.

ஆதரிப்போம்


இந்நிலையில் மம்தாவுக்கு ஆதரவாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் கூறியதாவது: காங்கிரஸ் எதிர்ப்பதற்கு ஒன்றும் இல்லை. மம்தாவை நாங்கள் ஆதரிப்போம். 'இண்டியா' கூட்டணியின் தலைமை மம்தாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.

திறமையானவர்


ஆந்திராவை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி எம்.பி., விஜயசாய் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், ' இண்டியா ' கூட்டணியை வழிநடத்த மம்தா திறமையான தலைவர். கூட்டணியை வழிநடத்த தேவையான அரசியல் தேர்தல் அனுபவம் உள்ளது. 42 லோக்சபா தொகுதிகள் கொண்ட பெரிய மாநிலத்தின் முதல்வராக உள்ள அவர், நேரம் கிடைக்கும் போது எல்லாம் தனது திறமையை நிரூபித்து வருகிறார்', இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us