சாதாரண சலூன் கடையில் தாடியை ‛‛டிரிம்'' செய்து கொண்ட ராகுல்
சாதாரண சலூன் கடையில் தாடியை ‛‛டிரிம்'' செய்து கொண்ட ராகுல்
ADDED : மே 15, 2024 11:10 PM

ரேபரேபலி: காங். எம்.பி. ராகுல் ரேபரேலியில் சாதாரண சலூன் கடைக்கு சென்று தாடியை ‛‛டிரிம்'' செய்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.
லோக்சபா தேர்தலில் உ.பி. மாநிலம் ரபரேலி தொகுதியில் காங்., எம்.பி., ராகுல் போட்டியிடுகிறார்.இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் வேட்புமனு தாக்கல் செய்தார். தீவிர பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட வேட்புமனு செய்துள்ளார்.
இந்நிலையில் (15.05.2024) ரேபரேலியில் உள்ள சாதாரண சலூன் கடைக்கு திடீரென சென்ற ராகுல், தனக்கு லேசாக முகச்சவரம் செய்துமாறு அங்கிருந்த கடை உரிமையாளரிடம் கூறினார். உடனே அவரும் ராகுலை நாற்காலியில் அமரவைத்து அவரது தாடியை ‛‛டிரிம்'' செய்தார். பின்னர் அவரிடம் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

