ஹத்ராஸ் நகர் செல்கிறார் ராகுல்? காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்
ஹத்ராஸ் நகர் செல்கிறார் ராகுல்? காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்
ADDED : ஜூலை 04, 2024 02:00 PM

புதுடில்லி: ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் 121 பேர் உயிரிழந்த உ.பி.,யின் ஹாத்ராஸ் நகருக்கு செல்ல எதிர்க்கட்சி தலைவர் ராகுல் திட்டமிட்டு உள்ளார்.
உ.பி.,யின் ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் திறந்தவெளியில், ஆன்மிகத் தலைவரான போலே பாபாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று முன்தினம்( ஜூலை 02) நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 121 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் நிருபர்களிடம் கூறியதாவது: ஹத்ராஸ் நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது. அந்நகருக்கு செல்ல ராகுல் திட்டமிட்டு உள்ளார். அந்நகரில், பாதிக்கப்பட்ட மக்களிடம் கலந்துரையாட உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.