ADDED : மார் 07, 2024 05:26 AM

அமேதி: வரும் லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உ.பி., மாநிலத்தின் அமேதி லோக்சபா தொகுதி எம்.பி.,யாக கடந்த 2002 முதல் 2019 வரை காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.,யுமான ராகுல் இருந்துள்ளார்.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோல்வியடைந்தார். அதே நேரத்தில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு ராகுல் எம்.பி.,யானார்.
இந்த நிலையில் ராகுல் மீண்டும் அமேதியில் போட்டியிடுவார் என, அமேதி மாவட்ட காங்., தலைவர் பிரதீப் சிங்கால் நேற்று தெரிவித்தார்.
டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று அமேதி திரும்பிய சிங்கால், ''அமேதியில் காங்., சார்பில் லோக்சபா வேட்பாளராக ராகுல் போட்டியிடுகிறார். இது தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும்,'' என்றார்.
மேலும், கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. உ.பி.,யின் ரேபரேலி தொகுதியில் ராகுலின் சகோதரியும், காங்., பொதுச் செயலருமான பிரியங்கா போட்டிடுவார் என கூறப்படுகிறது.

