
தொழில் திட்டங்களுக்கு அரசின் ஒப்புதலை பெறவும், நிதி திரட்டவும் மத்திய அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதானி லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா வழக்கு பதிந்துள்ளது. அவரை உடனே கைது செய்ய வேண்டும் என ராகுல் கூறியுள்ளார். அவர் சொல்வது சரிதான். அதானியை உடனே கைது செய்யுங்கள்.
லாலு பிரசாத் யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்
ஏழைகள் விரோத அரசு!
தேர்தல் சமயத்தில் கொடுத்த உத்தரவாதங்களை நிறைவேற்ற நிதி திரட்டும் முனைப்பில் உள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் உள்ளிட்டவற்றுக்கான கட்டணத்தை, 20 சதவீதம் உயர்த்தி உள்ளார். கர்நாடக அரசின் நடவடிக்கைகள் ஏழைகளுக்கு விரோதமானதாக உள்ளது.
விஜயேந்திரா, தலைவர், கர்நாடக பா.ஜ.,
காங்கிரசே காரணம்!
மணிப்பூரில் தற்போது நிலவும் கலவரங்களுக்கு காங்கிரசே காரணம். அவர்களின் ஆட்சிக்காலத்தில், சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் வெளிநாட்டு பயங்கர வாதிகளை நுழைய அனுமதித்தனர். இந்த பயங்கரவாதிகள் மற்றும் வன்முறை குழுக்களே மணிப்பூரில் தற்போது பரவும் கலவரங்களுக்கு காரணம்.
நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,

