இந்திரா நினைவு தினம்; சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை
இந்திரா நினைவு தினம்; சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை
ADDED : அக் 31, 2025 10:51 AM

புதுடில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா நினைவு தினத்தையொட்டி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் சோனியா ஆகியோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திராவின் 41வது நினைவு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இன்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, டில்லி ராஜ் காட்டில் உள்ள இந்திரா நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா மற்றும் ராகுல் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இது குறித்து ராகுல் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; இந்தியாவின் இந்திரா ஒரு அனைத்து சக்திகளுக்கும் முன்னால் அஞ்சாத, உறுதியான, அசைக்கமுடியாத தலைவர். இந்தியாவின் அடையாளத்தையும், தன்னம்பிக்கையும் விட மேலானது எதுவும் இல்லை என்று நீங்களே எனக்கு கற்றுக் கொடுத்தீர்கள்.
உங்கள் தைரியம், கருணை மற்றும் தேசபக்தியே இன்றும் எனது ஒவ்வொரு அடியையும் ஊக்கப்படுத்துகின்றன, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

