தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/போலீசார் மீது தாக்குதல்; ராகுல், பிரியங்கா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

போலீசார் மீது தாக்குதல்; ராகுல், பிரியங்கா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

போலீசார் மீது தாக்குதல்; ராகுல், பிரியங்கா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

17


ADDED : அக் 08, 2026 11:31 AM

Follow on GoogleFavourite on Google

17

ADDED : அக் 08, 2026 11:31 AM


17
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, டில்லி ஜந்தர் மந்தரில் இண்டி கூட்டணியினர் நேற்று போராட்டம் நடத்தினர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால், காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

ராகுல், பிரியங்கா மீது போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரை தாக்கியது, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

எஸ்ஐஆர் விவகாரம், ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்க இண்டி கூட்டணி கட்சியைச் சேர்ந்த 15 பேர் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், 10 பேர் சந்திக்க அனுமதிக்க தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குழுவில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியும் இடம்பெற்றிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us