ADDED : மே 10, 2024 01:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஐதராபாத்: தெலுங்கானாவில் அரசு பேருந்தில் பயணம் செய்த காங். எம்.பி.,ராகுல், பஸ்சில் பயணிகளுடன் கலந்துரையாடினார்.
லோக்சபா தேர்தலையொட்டி நேற்று காங்., எம்.பி.ராகுல் தெலுங்கானா வந்தார். மல்காஞ்ச்கிர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சரூர் நகரில் நடக்கவுள்ள தேர்தல் பிரசார கூட்டத்திற்கு செல்வற்காக தலைநகர் ஐதராபாத் சென்று, அங்கு தெலுங்கானா அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான பேருந்தில் பயணித்தார். அவருடன் தெலுங்கானா காங்.,முதல்வர் ரேவந்த் ரெட்டி, உள்ளிட்ட காங்., நிர்வாகிகளும் சென்றனர்.
அப்போது பஸ் பயணிகளிடம் கலந்துரையாடினார். குறிப்பாக பெண்களுக்கு இலவச பஸ் திட்டம் குறித்தும் அதன் பலன்கள் குறித்தும் கேட்டறிந்தார். காங்., ஆட்சிக்கு வந்தால் தேர்தல் அறிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.