'டூப்' நபரை பயன்படுத்தும் ராகுல்: அசாம் முதல்வர் திடுக்கிடும் புகார்
'டூப்' நபரை பயன்படுத்தும் ராகுல்: அசாம் முதல்வர் திடுக்கிடும் புகார்
ADDED : ஜன 28, 2024 12:51 PM

கவுஹாத்தி: ராகுல் யாத்திரையில் அவரை போலவே தோற்றம் கொண்ட இன்னொருவரை, 'டூப்' ஆக பயன்படுத்தி வருகிறார் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மணிப்பூர்- மஹாராஷ்டிரா நியாய யாத்திரை, ஜனவரி 18 முதல் 25 வரை அசாம் வழியாகச் சென்றது. அப்போது, 'இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் அசாம் முதல்வர் தான்' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து லோக்சபா தேர்தலுக்கு பிறகு ராகுல் கைது செய்யப்படுவார் என அசாம் முதல்வர் பதிலடி கொடுத்தார்.
யாத்திரையின் போது, வீதி மீறியதாக கூறி, ராகுல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய அசாம் முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். அசாம் மாநிலத்தில் பல்கலை., மாணவர்களுடன் ராகுல் உரையாற்ற நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது, அதனை கடைசி நேரத்தில், பல்கலை., நிர்வாகம் தடை செய்தது. அசாம் அரசுக்கும், ராகுலுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
'டூப்' நபர்
இந்நிலையில், அசாம் முதல்வர், '' காங்கிரஸ் எம்.பி ராகுல் பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையில், அவரை போலவே தோற்றம் கொண்ட இன்னொருவரை, 'டூப்' ஆக பயன்படுத்தி வருகிறார். அவரது பெயர், முகவரியை ஓரிரு நாட்களில் வெளியிடுவேன் என திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

