ராகுல் நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார்: சொல்கிறார் கார்கே
ராகுல் நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார்: சொல்கிறார் கார்கே
ADDED : ஜன 29, 2024 04:41 PM

புவனேஸ்வர்: ராகுல் நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார் என காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார்.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கார்கே பேசியதாவது: எதிர்க்கட்சி தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்புகிறது. பயத்தின் காரணமாக, சிலர் கூட்டணியை விட்டு வெளியேறுகிறார்கள். மக்களை மிரட்டுகிறார்கள். இதுவே மக்களுக்கு ஓட்டளிக்க கடைசி வாய்ப்பு. இதற்கு பிறகு ஓட்டெடுப்பு நடக்காது. மோடி மீண்டும் நாட்டின் பிரதமரானால் நாட்டில் தேர்தல் முறைக்கு முடிவு கட்டி விடுவார்.
மேலும் அவர் நாட்டின் ஜனநாயகத்திற்கு முடிவு கட்டிவிட்டு, சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தி விடுவார். நரேந்திர மோடியுடனான நட்பால் ஒடிசா முதல்வர் என்ன லாபம் அடைந்தார்?. ராகுல் நாட்டை ஒருங்கிணைக்க விரும்புகிறார். நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பா.ஜ.,வும் ஆர்.எஸ்.எஸ்.,சும் நமது உரிமைகளைப் பறிக்கிறது. இவ்வாறு கார்கே பேசினார்.