sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பின்வாசல் வழியாக வெல்ல நினைக்கும் ராகுல்: பா.ஜ., கடும் விமர்சனம்

/

பின்வாசல் வழியாக வெல்ல நினைக்கும் ராகுல்: பா.ஜ., கடும் விமர்சனம்

பின்வாசல் வழியாக வெல்ல நினைக்கும் ராகுல்: பா.ஜ., கடும் விமர்சனம்

பின்வாசல் வழியாக வெல்ல நினைக்கும் ராகுல்: பா.ஜ., கடும் விமர்சனம்

18


UPDATED : மே 03, 2024 01:31 PM

ADDED : மே 03, 2024 11:33 AM

Google News

UPDATED : மே 03, 2024 01:31 PM ADDED : மே 03, 2024 11:33 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அமேதி தொகுதியில் போட்டியிடாமல், ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட காங்., முன்னாள் தலைவர் ராகுல், பின்வாசல் வழியாக வெற்றியடைய நினைக்கிறார் என பா.ஜ., விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி., ராகுல், ரேபரேலி, வயநாடு உள்ளிட்ட 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து பா.ஜ.,வினர் கடும் விமர்சனம் செய்துள்ளனர்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்:

Image 1264769பலமுறை பயப்படாதீர்கள், பயப்படாதீர்கள் எனக் கூறிவந்த ராகுல், இப்போது பயம் காரணமாக அமேதியில் இருந்து வயநாடு சென்றார், வயநாடில் இருந்து ரேபரேலி வந்துள்ளார். தோல்வி பயம் அவரை எல்லா இடங்களிலும் அழைத்துச் செல்கிறது. ஒரு பக்கம் ராபர்ட் வாத்ரா சீட் கேட்டும், மறுபுறம் பிரியங்காவுக்கு கட்சியினர் ஆதரித்தும் தனது சகோதரிக்கு ராகுலால் நீதி வழங்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள் ஏதோ நடக்கிறது.

உ.பி., துணை முதல்வர் பிரஜேஷ் பதக்:

Image 1264772ரேபரேலியிலும், அமேதியிலும் பா.ஜ., மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப்பெறும். முதலில் ராகுல், அமேதியில் இருந்து வெளியேறி வயநாடு சென்றார்; இப்போது அவர் ரேபரேலி வந்துள்ளார். அங்குள்ள மக்கள் எப்போதும் ராகுலை ஏற்க மாட்டார்கள். உ.பி.,யில் உள்ள 80 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றிப்பெறும்.

பா.ஜ., செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா:

Image 1264770தோல்வியை ஒப்புக்கொண்டு அமேதியை விட்டு வெளியேறியதை காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இத்தனை ஆண்டுகளாக அமேதி மக்களை ஏமாற்றிவிட்டு வயநாடு சென்றனர். இப்போது வயநாடு மக்களையும் ஏமாற்றிவிட்டனர். வயநாடை 'யூஸ் அண்ட் த்ரோ' ஆக நினைத்துவிட்டார்கள். ரேபரேலி தொகுதிதான் பாதுகாப்பானது என அதை தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

ஆனால் உ.பி.,யில் உள்ள 80 தொகுதிகளிலும், நாடு முழுவதும் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெல்லும். அமேதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கிஷோரி லால் சர்மா, பலிகடா ஆக்கப்பட்டுள்ளார். அதேபோல், ரேபரேலி தொகுதியில் போட்டியிட கடுமையாக முயற்சி செய்தும் வாய்ப்பிழந்த பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவை நினைத்து வருத்தப்படுகிறேன்.

பா.ஜ., செய்தித்தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில்:

Image 1264771அமேதியை விட்டு வெளியேறிய ராகுல், ஒட்டுமொத்த தேசத்திற்கும் தனது கோழைத்தனம் மற்றும் பாசாங்குத்தனத்தை நிரூபித்துள்ளார். பின்வாசல் வழியாக வெற்றியடைய நினைக்கிறார். அவர் அமேதியில் போட்டியிடாமல் தொகுதி மாறியது, பிரியங்கா தேர்தலில் போட்டியிடாமல் நழுவியது ஆகியவை காங்கிரஸ் பயந்து நடுங்குவதையே காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி வெகுவிரைவில் தனது ஆட்டத்தை முடித்துக்கொள்ளும்.

சத்தீஸ்கர் துணை முதல்வர் அருண் சாவ்:

Image 1264768முதலில் அமேதியில் இருந்து வெளியேறி வயநாடில் நின்றார். இப்போது அங்கும் தோல்வியடைவார் எனத் தெரிந்ததும், ரேபரேலியில் போட்டியிட வந்துள்ளார். மக்களின் விருப்பத்திற்கு வருபவர்களையும், தன்னுடைய விருப்பத்திற்காக வருபவர்களையும் வயநாடு மக்களுக்கு நன்றாக தெரியும். ரேபரேலி மக்களும் ராகுலை தோற்கடிப்பார்கள்.

அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

பா.ஜ., எம்.பி.,யின் கீழ் தொகுதி வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், பல தசாப்தங்களாக காங்கிரஸ் இத்தொகுதியை கண்டு கொள்ளாமல் இருந்தது. இன்று அமேதி மக்களுக்கு வெற்றி கிடைத்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அமேதிக்கு செல்லவில்லை என்றார்.






      Dinamalar
      Follow us