தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ராகுல் வயநாடு பயணம் ரத்து

ராகுல் வயநாடு பயணம் ரத்து

ராகுல் வயநாடு பயணம் ரத்து


ADDED : ஜூலை 31, 2024 06:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2024 06:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, காங்., எம்.பி., ராகுல், தனது வயநாடு பயணத்தை ரத்து செய்துள்ளார்.

தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இரு சம்பவங்களில் இதுவரை 133 பேர் பலியாகியுள்ளனர். பலர் மண்ணில் புதையுண்டனர்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங். எம்.பி.யுமான ராகுல் இன்று (ஜூலை 31) வயநாடு செல்ல உள்ளாக தெரிவிக்கப்பட்டது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், ராகுல், தனது வயநாடு பயணத்தை ரத்து செய்துள்ளார். தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளதால், பயணம் ரத்து செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், விரைவில் வயநாடு வருகை தருவதாக ராகுல் உறுதி அளித்திருக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us