ரேபரேலியில் ராகுல் தோல்வியடைவார் : அமித்ஷா பேச்சு
ரேபரேலியில் ராகுல் தோல்வியடைவார் : அமித்ஷா பேச்சு
ADDED : மே 03, 2024 01:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்கோடி தொகுதியில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: ராகுலை பா.ஜ.,விற்கு எதிராக 20 முறை சோனியா கொண்டு வந்தார். ஆனால், அனைத்திலும் ராகுல் தோல்வியை சந்தித்தார். இன்று அமேதியில் இருந்து ரேபரேலி ஓடி உள்ளார். இங்கிருந்து அந்தத் தொகுதியின் முடிவை நான் கூறுகிறேன். அங்கு, பா.ஜ., வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கிடம் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ராகுல் தோல்வி அடைவார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.