ராகுலின் 2வது யாத்திரை:‛‛பாரத் ஜோடோ நீதி'' யாத்திரை என பெயர் மாற்றம்
ராகுலின் 2வது யாத்திரை:‛‛பாரத் ஜோடோ நீதி'' யாத்திரை என பெயர் மாற்றம்
UPDATED : ஜன 04, 2024 08:41 PM
ADDED : ஜன 04, 2024 08:36 PM

புதுடில்லி: ஜன.,,14 முதல் மார்ச் 20 வரை மணிப்பூரில் இருந்து மும்பை வரை காங்., எம்.பி., ராகுல் துவக்க உள்ள அடுத்த கட்ட யாத்திரைக்கு பாரத் ஜோடோ நீதி யாத்திரை என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 லோக்சபா தேர்தல் தொடர்பான பணிகளும் நடந்து வருகின்றன. ஜன.,14ல் பேருந்து மூலம் ராகுல், மணிப்பூர் முதல் மும்பை வரை 6,200 கி.மீ தூரத்தை உள்ளடக்கி பாரத் நியாய யாத்திரை என்ற பெயரில் துவங்குகிறார். இந்த யாத்திரைக்கு பாரத் ஜோடோ நீதி யாத்திரை' என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த யாத்திரை மணிப்பூர், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்குவங்கம், பீஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உ.பி., ம.பி., ராஜஸ்தான், குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய 14 மாநிலங்கள் வழியாக 66 நாட்கள் (மார்ச் 20 வரை) பேருந்தில் ராகுல் பயணித்து , குஜராத்தின் போர்பந்தரில் யாத்திரையை நிறைவு செய்ய உள்ளார்.