ADDED : ஜன 09, 2025 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரோஸ் அவென்யூ:வரும் 13ம் தேதி டில்லியில் தேர்தல் பேரணியில் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உரையாற்றுகிறார்.
வடகிழக்கு டில்லியின் சீலம்பூர் பகுதியில் இந்தப் பேரணி நடத்தப்படும். சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக ராகுல் பங்கேற்கும் முதல் பேரணி இது.
பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே நகரில் இரண்டு நிகழ்ச்சிகளை நடத்தி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது அரசாங்கத்தை கடுமையாக தாக்கிப் பேசினார்.
சட்டசபைத் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னதாக கட்சி உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் காங்கிரஸ் ஒரு மாத கால டில்லி நியாய யாத்திரையையும் நடத்தியது. இந்த யாத்திரை டிசம்பர் 7ம் தேதி நிறைவடைந்தது.

