மாயமாகும் ராகுல் அணி: காங்.,கில் இருந்து வெளியேறிய 12 பெரிய தலைவர்கள்
மாயமாகும் ராகுல் அணி: காங்.,கில் இருந்து வெளியேறிய 12 பெரிய தலைவர்கள்
UPDATED : ஜன 14, 2024 05:53 PM
ADDED : ஜன 14, 2024 05:49 PM

புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, காங்கிரசில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்தார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அக்கட்சியில் இருந்து 12 பெரிய தலைவர்கள் விலகி உள்ளனர்.
அவர்களின் பட்டியல் பின்வருமாறு
மிலிந்த் தியோரா

மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் முரளி தியோராவின் மகனான மிலிந்த் தியோரா மத்திய அமைச்சராக பதவி வகித்தவர் . மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக உத்தவ் தாக்கரே தரப்பினர் நடவடிக்கை காரணமாக அதிருப்தியில் இருந்தார். தற்போது அவர் கட்சியில் இருந்து விலகி, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளார்.
ஹர்திக் படேல்

அஸ்வனி குமார்
முன்னாள் மத்திய அமைச்சரான இவர், 2022ல் காங்கிரசில் இருந்து விலகினார். 2019 ல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்து வந்த அவர், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னர் கட்சியில் இருந்து விலகினார்.
சுனில் ஜாகர்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுனில் ஜாகர். அம்மாநில காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக இருந்த சரண்ஜித் சிங் சன்னியை விமர்சனம் செய்ததற்காக சனில் ஜாகருக்கு மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. இதனால், அவர் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். அவருக்கு மாநில தலைவர் பதவியை பா.ஜ., வழங்கியது.
ஆர்பிஎன் சிங்

ஜோதிராதித்யா சிந்தியா

ஜிதின் பிரசாதா

அல்பேஷ் தாக்கூர்

அனில் அந்தோணி

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அனில் அந்தோணி, கடந்த ஆண்டு ஜன.,மாதம் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார். இதற்கு அவரது தந்தை அதிருப்தி தெரிவித்தார்.

