ADDED : செப் 21, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுப்பி: ஓடும் ரயிலில் ஏற முயன்று, தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை, ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர் காப்பாற்றினார்.
உடுப்பி ரயில் நிலையத்தில், ஒரு பெண், ரயிலுக்காக காத்திருந்தார். மங்களூரு - மடகாவ் ரயில் வந்தது. ரயிலின் வேகம் குறைவதற்கு முன்பே, ஓடும் ரயிலில் ஏற அப்பெண் முயன்றார்.
தடுமாறி கீழே விழுந்தார். இதை கவனித்த ரயில்வே பாதுகாப்பு படை பெண் ஊழியர், சிறிதும் தாமதிக்காமல் பெண்ணை வெளியே இழுத்து வந்து காப்பாற்றினார்.
பாதுகாப்பு ஊழியரின் சமயோஜித செயலால் அப்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.