ADDED : நவ 02, 2025 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவனந்தபுரம்: கேரளாவில், ரயில் நிலையத்தில் நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, ரயில்வே போர்ட்டர் கைது செய்யப்பட்டார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள கொச்சுவேலி ரயில் நிலையத்தில், அருண் என்பவர் போர்ட்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இந்த ரயில் நிலையத்துக்கு வந்த நடிகை ஒருவர், ரயில் நடைமேடை குறித்து அருணிடம் கேட்டார்.
தகவல் கூறுவது போல நடித்து, நடிகையிடம் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். ரயில்வே அதிகாரிகளின் உதவியுடன் அங்கிருந்து தப்பிய நடிகை, பெட்டா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இதன்படி வழக்குப் பதிந்த போலீசார், அருணை கைது செய்தனர். இதற்கிடையே பணியில் இருந்து அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

