பார்லி.,யில் ஒழுகும் மழைநீர்: காங்., ஒத்திவைப்பு நோட்டீஸ்
பார்லி.,யில் ஒழுகும் மழைநீர்: காங்., ஒத்திவைப்பு நோட்டீஸ்
UPDATED : ஆக 01, 2024 01:48 PM
ADDED : ஆக 01, 2024 10:55 AM

புதுடில்லி: புது பார்லிமென்ட் லாபி பகுதியில் மழை நீர் ஒழுகுவதால், அந்த இடத்தில், ஊழியர்கள் வாளியை வைத்து பிடித்து கொண்டுள்ளனர். இது குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில், காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.
டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை டில்லியில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்தது. 112.5 மி.மீ., மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, பார்லிமென்ட் செல்லும் சாலைகள் மற்றும் பார்லிமென்ட் வளாகத்தின் உட்பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்தது.
பார்லிமென்ட் உள்ளே லாபி பகுதியில் மேற்கூரையில் இருந்து நீர்கசிவு ஏற்பட்டு ஒழுகியது. அந்த இடத்தில் ஊழியர்கள் வாளியை வைத்து மழைநீரை பிடித்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர், மழைநீர் கசிவதால், கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்த வேண்டும். இது குறித்து விவாதிக்க வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.