ADDED : பிப் 09, 2026 01:00 AM

எஸ்.ஐ.ஆர்., பணியை நடை முறைப்படுத்தி பீஹார் தேர்தலில் பா.ஜ., கூட்டணி வென்றது. மேற்கு வங்கத்திலும் இதேபோல் முயற்சிக்கின்றனர். உ.பி.,யிலும் சமாஜ்வாதியின் ஓட்டு சதவீதத்தை மாற்ற, படிவம் 7ஐ தவறாக பயன்படுத்தும் தேர்தல் கமிஷன், தங்கள் கட்டடத்தில் பா.ஜ.,வின் கொடியை ஏற்றட்டும்.
- அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாதி
சீரான முன்னேற்றம்!
நம் நாடு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி சீராக முன்னேறி வருகிறது. மத்திய பட்ஜெட், ஸ்திரத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, நீடித்த வளர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. இவை, நீண்டகால இலக்குகளை நோக்கி முன்னேற உதவும்.
- கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய அமைச்சர், பா.ஜ.,
மோசடி தின வாழ்த்து!
டில்லியில் ஓராண்டுக்கு முன் மோசடி செய்து ஆட்சி அதிகாரத்தை பா.ஜ., கைப்பற்றியது. இதன் ஓராண்டு நிறைவையொட்டி அக்கட்சிக்கு மோசடி தின வாழ்த்துகள். புல்டோசர் நடவடிக்கை, சுத்தமான குடிநீர் பற்றாக்குறை மற்றும் தொடர்ந்து நீடிக்கும் குப்பைக்கிடங்கு பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்தாமல் உள்ளது.
- சவுரப் பரத்வாஜ், டில்லி தலைவர், ஆம் ஆத்மி

