ADDED : டிச 20, 2024 11:10 PM

கொப்பால்: அஞ்சனாத்ரி மலைக்கு வந்த ராஜஸ்தான் பெண், உடல் நிலை பாதிக்கப்பட்டார். அவரை ஸ்ட்ரெச்சரில் துாக்கி வந்து, மலை அடிவாரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ராஜஸ்தானின் ஜோத்பூரை சேர்ந்தவர் சுமித்ரா நந்தகிருஷ்ணா, 55. இவர் கொப்பால், கங்காவதியின் சிக்க ராம்புரா கிராமத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலைக்கு வந்திருந்தார். நேற்று காலையில், மலை அடிவாரத்தில் இருந்து, 503 அடி உயரத்தில் உள்ள மலைக்கு ஏறினார்.
அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு, மயங்கி விழுந்தார். இவருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் இருந்துள்ளது. மயங்கிய அவரை கோவில் ஊழியர்கள், ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து, அடிவாரத்துக்கு அழைத்து வந்தனர்.
ஆம்புலன்ஸ் வரவழைத்து, ஆனேகுந்தி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்குள்ள டாக்டர்கள், அவருக்கு சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு குறைந்த பின், டிஸ்சார்ஜ் செய்தனர். அவருடன் வந்திருந்த யாத்ரிகர்களுடன் அவரை அனுப்பி வைத்தனர்.