பாதுகாப்புத்துறை செயலராக ராஜேஷ்குமார் சிங் பொறுப்பேற்பு
பாதுகாப்புத்துறை செயலராக ராஜேஷ்குமார் சிங் பொறுப்பேற்பு
ADDED : நவ 01, 2024 09:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பாதுகாப்புத்துறை செயலராக ராஜேஷ்குமார் சிங் இன்று பொறுப்பேற்றார். மத்திய அரசின் பாதுகாப்புத்துறை செயலராக இருந்த ஸ்ரீ கிரிதர் அர்மானே நேற்று (அக்.31) ஒய்வு பெற்றார். இதையடுத்து புதிய செயலராக மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி ராஜேஷ்குமார் சிங் இன்று பொறுப்பேற்றார். முன்னதாக டில்லியில் உள்ள போர்வீரர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
இன்று பாதுகாப்புத்துறை செயலராக பொறுப்பேற்ற ராஜேஷ் சிங் 1989-ம் ஆண்டு கேரள ஐ.ஏ.எஸ்., கேடர் ஆவார். இதற்கு முன் தொழில்துறை, மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை செயலராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

