sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சமுத்திர பிரதாப் கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்: ராஜ்நாத் சிங்

/

சமுத்திர பிரதாப் கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்: ராஜ்நாத் சிங்

சமுத்திர பிரதாப் கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்: ராஜ்நாத் சிங்

சமுத்திர பிரதாப் கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்: ராஜ்நாத் சிங்

1


ADDED : ஜன 05, 2026 12:55 PM

Google News

ADDED : ஜன 05, 2026 12:55 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனாஜி: கோவா கப்பல் கட்டும் தளத்தில் சமுத்திர பிரதாப் கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். அவர் இந்த கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என பேசுகையில் தெரிவித்தார்.

இரண்டு மாசு கட்டுப்பாட்டு கப்பல்களில் முதலாவதாக சமுத்திர பிரதாப் கப்பலை, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கோவா கப்பல் கட்டும் தளத்தில் நடந்த நிகழ்ச்சியில் இன்று (ஜனவரி 05) மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் அர்ப்பணித்தார். இந்திய கடலோர காவல்படைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பல் தான் சமுத்திரா பிரதாப்.

இந்த கப்பலில் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் 60 சதவீதம் உள்நாட்டை சேர்ந்தவை. இந்த கப்பல் 114. 5 மீட்டர் நீளம், 4,200டன் எடை கொண்டது. 6 ஆயிரம் கடல் மைல் தூரம் வரை செல்லக்கூடியது. இக்கப்பலில் ரசாயன கண்டுபிடிப்பு கருவிகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் மாசுவை அகற்றும் இதர சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: தொலை நோக்கு பார்வையுடன் இந்திய கடற்படையில் சமுத்தர பிரதாப் கப்பல் இணைக்கப்பட்டு உள்ளது. கடல் வளங்கள் எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தமானது அல்ல. கடலோர காவல் படையில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து அதிகாரம் அளித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது எங்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும். சமுத்திர பிரதாப் கப்பல் இந்தியாவின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

இந்த கப்பலை இயக்குவது நமது வலிமையை அதிகரிக்கும். இந்த கப்பல் நமது கூட்டு முயற்சியின் அடையாளம். மாசு கட்டுப்பாட்டை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது இன்றைய சவால்களை எதிர்கொள்ள மிகவும் அவசியம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார். நிகழ்ச்சியில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், மத்திய பாதுகாப்பு செயலாளர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us