எதிர்கால சவால்களை சமாளிக்க தயாராக வேண்டும்: விமானப்படை தளபதிகளுக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
எதிர்கால சவால்களை சமாளிக்க தயாராக வேண்டும்: விமானப்படை தளபதிகளுக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
ADDED : டிச 18, 2025 07:00 PM

புதுடில்லி: ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, எதிர்கால சவால்களை சமாளிக்க தயாராக இருக்குமாறு விமானப்படை தளபதிகளுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைசச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.
டில்லியில் விமானப்படைத் தளபதிகள் மாநாட்டில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
ஆயுதப் படைகள், ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் போது
இந்தியாவின் 'உயர் தாக்கமுள்ள, குறுகிய கால' செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்தியது.
அதனை தொடர்ந்து மேலும் அந்த தீர்க்கமான ராணுவ நடவடிக்கையிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, நீங்கள் எதிர்கால சவால்கள் அனைத்தையும் சாமாளிக்க தயாராக இருக்க வேண்டும்.
'21-ஆம் நூற்றாண்டுப் போர் என்பது வெறும் ஆயுதப் போர் மட்டுமல்ல, போர் தொடர்பான கருத்துக்கள், தொழில்நுட்பம் மற்றும் தகவமைப்பும் தான்' .
ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையின் போது இந்திய விமானப்படை,பயங்கரவாத முகாம்களை அழித்த துணிச்சல், வேகம் மற்றும் துல்லியம் குறித்தும், இந்தியத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் 'பொறுப்பற்ற எதிர்வினையை' திறம்பட கையாண்டதற்கு எனது பாராட்டுக்கள்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

