ADDED : மார் 15, 2024 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாத்கிர்: கர்நாடகா பா.ஜ., துணை தலைவர் ராஜு கவுடா, யாத்கிரில் நேற்று அளித்த பேட்டி:
பா.ஜ., - எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே, அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கூறி உள்ளார். அவரது அப்பா வந்தாலும், அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முடியாது. இதுபோன்று ஏதாவது பேசி தான், கடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை தோற்கடித்தார். நான்கு ஆண்டுகள் அவர் எங்கே போனார்?
தேர்தல் நேரத்தில் இது மாதிரி, காட்டுமிராண்டித்தனமாக கருத்துகளை பேசி வருகிறார். தேவையின்றி பேசுவதை, அனந்த்குமார் ஹெக்டே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடியை போன்று அம்பேத்கரை மதிக்கும் தலைவர் யாரும் இல்லை. அம்பேத்கர் வழிகாட்டுதல்படி அவர் நடக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

