டில்லி ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மூன்று பேர் வேட்புமனு
டில்லி ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மூன்று பேர் வேட்புமனு
ADDED : ஜன 08, 2024 06:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி அரசின் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு ஆம் ஆத்மி கட்சியினர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
டில்லி அரசின் ஆம்ஆத்மி ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த சஞ்சய் சிங், சுஷில்குமார் குப்தா, நாராயண்தாஸ் குப்தா ஆகியோர் பதவி காலம் வரும் 27-ம் தேதி நிறைவடைகிறது.
இதையடுத்து இப்பதவிகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இதையடுத்து இன்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் சஞ்சய்சிங், டில்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், நாராயண் தாஸ் குப்தா ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.இதில் மதுபான கொள்கையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சஞ்சய் சிங் மீண்டும் போட்டியிட வேட்புமனு செய்துள்ளார்.