தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ராஜ்யசபா தேர்தல்: உ.பி.,-8 இமாச்சலில்-1 பா.ஜ., கர்நாடகாவில் காங்.,-3 வெறறி

ராஜ்யசபா தேர்தல்: உ.பி.,-8 இமாச்சலில்-1 பா.ஜ., கர்நாடகாவில் காங்.,-3 வெறறி

ராஜ்யசபா தேர்தல்: உ.பி.,-8 இமாச்சலில்-1 பா.ஜ., கர்நாடகாவில் காங்.,-3 வெறறி


UPDATED : பிப் 27, 2024 09:24 PM

ADDED : பிப் 27, 2024 07:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2024 09:24 PM ADDED : பிப் 27, 2024 07:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: காலியாக உள்ள 15 ராஜ்யசபா பதவிக்கு இன்று தேர்தல் நடந்தது. இதில்உ.பி., மற்றும் இமாச்சல் பிரதேச மாநிலங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது.கர்நாடகாவல் காங்., வெற்றி பெற்றது.

உ.பி.யில் ஓட்டு எண்ணிக்கையின் போது எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறி ஓட்டு ஓட்டுப்போட்டதாக புகார் எழுந்ததால், ஒட்டு எண்ணும் மையத்தில் பரபரப்பு காணப்பட்டது.

ராஜ்யசபாவில் 56 எம்.பி., பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதில், பா.ஜ., தலைவர் நட்டா, மத்திய இணை அமைச்சர் முருகன், காங்கிரஸ் எம்.பி., சோனியா உள்ளிட்டோர் அடங்குவர்.

வெற்றி பெற்ற எம்.பி.,க்களில் 20 பேர் பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் சார்பில் 6, திரிணமுல் சார்பில் 4 , ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் 3, ஆர்ஜேடி, பிஜூ ஜனதா தளம் சார்பில் தலா 2, தேசியவாத காங்கிரஸ், பிஆர்எஸ், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்.பி., வெற்றி பெற்றனர்.

எஞ்சிய உ.பி., கர்நாடகா, ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு இன்று(பிப். 27) தேர்தல் நடைபெற்றது.. இன்று மாலையே ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கர்நாடகா:


*கர்நாடகாவில் 4 ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 3 பேரும், பா.,ஜ.வில் ஒருவரும் வெற்றி பெற்றனர். பாஜ., ம.சா.ஜனதாதள கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வி அடைந்தார்.

ஹிமாச்சல்


*ஹிமாச்சல பிரதேசத்தில் ஓட்டு எண்ணிக்கையின் போது பா.ஜ., காங்., இடையே மோதல் ஏற்பட்டதால் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இதில் 9 காங்., எம்.எல்.ஏ.க்களை ஒட்டு போட விடாமல் கடத்திச் சென்றதாக பா.ஜ., மீது காங்கிரஸ் முதல்வர் சுகு குற்றம்சாட்டினார்.

இதனிடையே பா.ஜ.,வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். மேலும் காங்.,வேட்பாளர் அபிஷேக் சிங்வி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்.

உ.பி.


* உ.பி.,யில் 10 இடங்களுக்கு ராஜ்யபசா தேர்தல் நடைபெறுகிறது. ஒரு எம்.பி.,யை தேர்வு செய்ய 37 ஓட்டுகள் தேவை. இதில் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் பா.ஜ.,வால் 7, சமாஜ்வாதியால் 3, வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியும். ஆனால், பா.ஜ., 8வதாக சஞ்சய் சேத் என்பவரை நிறுத்தின . சமஜ்வாதி கட்சி யை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் ஒரு சிலர் கட்சி மாறி ஓட்டளித்தனர். இதன் காரணமாக பா.ஜ.,. எட்டு இடங்களிலும், சமஜ்வாதி கட்சி இரண்டு இடங்களிலும் வெறறி பெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us