வன சட்டத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி கேரளாவில் பேரணி
வன சட்டத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி கேரளாவில் பேரணி
ADDED : ஏப் 10, 2025 09:46 PM

பாலக்காடு, ;மலைவாழ் விவசாயிகள் மற்றும் மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க மத்திய வனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும், என, கேரள மாநில காங்., தலைவர் முரளீதரன் தெரிவித்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு நெம்மாரா கோட்ட வன அலுவலகத்துக்கு, ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில், வன விலங்குகளிடமிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கவும், வனச் சட்டத்தை திருத்த கோரி பேரணி நடத்தினர்.
நெம்மாரா பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து தொடங்கிய போராட்டப் பேரணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியை துவக்கி வைத்து, கேரள மாநில காங்., தலைவர் முரளீதரன் பேசியதாவது:
மலைவாழ் விவசாயிகள் மற்றும் மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க மத்திய வனச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். விவசாயிகளும் பொதுமக்களும் தற்போதுள்ள சட்ட அமைப்புகளால் பாதுகாக்கப்படுவதில்லை. மலைப்பகுதிகளில் உள்ள விவசாயிகளின் பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்ய, அவர்களை பாதுகாக்கும் சட்டம் இருக்க வேண்டும். விவசாய நிலங்களுக்குள் நுழையும் வன விலங்குகளை விரட்ட, அறிவியல் பூர்வமான அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
வனவிலங்குகள் மனிதர்களை தாக்குவதால் உயிரிழப்புகள் ஏற்படும் போது, மாநில அரசும் வனத்துறையும் மவுனம் காப்பது சரியல்ல.
இவ்வாறு, கூறினர்.

