ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உறுப்பினர் மிஸ்ரா காலமானார்
ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உறுப்பினர் மிஸ்ரா காலமானார்
ADDED : ஆக 25, 2025 12:26 AM
அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை முக்கிய உறுப்பினர் பிமலேந்திர மிஸ்ரா, 75, காலமானார்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும், அயோத்தி அரச குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவருமான பிமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா நேற்று காலமானார்.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பல மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த மிஸ்ரா, நேற்று முன்தினம் இரவு அயோத்தியில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதித்ததை அடுத்து கோவில் கட்டுவதற்காக ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. இதன் முக்கிய உறுப்பினராக இருந்தவர் மிஸ்ரா.
முன்னதாக கடந்த 2009ல் பைசாபாத் லோக்சபா தொகுதியில் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்டு மிஸ்ரா தோல்வி அடைந்தார்.