ராம் நகர் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்' சட்டசபையில் அமைச்சர் தகவல்
ராம் நகர் இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்' சட்டசபையில் அமைச்சர் தகவல்
ADDED : பிப் 22, 2024 07:16 AM

பெங்களூரு: “இன்ஸ்பெக்டர் தன்வீர் ஹுசேனை சஸ்பெண்ட் செய்திருப்பதால், விசாரணைக்கு உதவியாக இருக்கும்,” என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று அவர் பேசியதாவது:
ராம்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்வீர் ஹுசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது விசாரணைக்கு உதவியாக இருக்கும். சம்பவத்துக்கு காரணமான வக்கீல் சாந்த் பாஷா, பல முறை குற்றச்செயல்களில் ஈடுபட்டது உறுதியானதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
ராம்நகர் வக்கீல்கள் மூன்று நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர். அவர்கள் இன்று (நேற்று) பெங்களூருக்கு வந்து, போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர். வக்கீல்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் வலியுறுத்தலின்படி, இன்ஸ்பெக்டர் தன்வீர் ஹுசேன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே சென்னபட்டணா டி.எஸ்.பி., விசாரணையை துவக்கியுள்ளார். இத்தகைய நேரத்தில், இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால், விசாரணைக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கூறினார்.