'ஒரே நாடு, ஒரே தேர்தல்': 2 பிரச்னைகள் இருக்கிறது; நிராகரிப்பதாக மம்தா பானர்ஜி கருத்து
'ஒரே நாடு, ஒரே தேர்தல்': 2 பிரச்னைகள் இருக்கிறது; நிராகரிப்பதாக மம்தா பானர்ஜி கருத்து
ADDED : ஜன 11, 2024 04:46 PM

புதுடில்லி: ‛‛இரண்டு பிரச்னைகள் இருப்பதால் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்'' எனும் கருத்தில் தங்கள் கட்சிக்கு உடன்பாடு இல்லை என்று திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்தி முடிப்பது குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு தங்கள் கருத்துக்களை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் எழுதி அனுப்பி தெரிவித்து வருகிறது.
2 பிரச்னைகள்
இந்நிலையில் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை என்பதில் நான் வருந்துகிறேன். உங்கள் உருவாக்கம் மற்றும் முன்மொழிவுடன் நாங்கள் உடன்படவில்லை.
ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறாதவாறு இருப்பதுதான் நமது அமைப்பின் அடிப்படை. அதில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறாமல் இருப்பது என்பது, இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். இவ்வாறு கடிதத்தில் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து வரும் ஜன.,15ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் தலைமையிலான ஆய்வுக் குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

