உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 08, 2026 01:09 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி:டில்லி சட்டசபை யில் நேற்று முன்தினம் இரவில், கவிஞர் குமார் விஸ்வாஸ் தலைமையிலான குழுவினரின் ராமகதை இசை நாடகத்தை, முதல்வர் ரேகா குப்தா பார்த்து மகிழ்ந்தார்.
இதை முன்னிட்டு, சட்டசபை வளாகம், காவி நிறத்தில், ஒளி விளக்குகளால் ஜொலித்தது. இந்த நிகழ்ச்சி, பிரபல ராமகதை இசையமைப்பாளர் குமார் விஸ்வாஸ் என்பவரால் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், சட்டசபை சபாநாயகர் விஜேந்தர்குப்தா பங்கேற்றார்.
அப்போது அவர் கூறும் போது, ''ராமகதையின் நாயகன் ராம பிரான் வாழ்க்கை, இந்த காலம் மட்டுமின்றி, எந்த காலத்திற்கும் பொருந்தும். அவரின் வாழ்க்கை, பொதுவாழ்க்கைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் எப்படி நிலைத்தன்மை இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது,'' என்றார்.
இந்த நிகழ்ச்சி, டில்லி மாநில கல்வித்துறை சார்பில் நடந்தது.
