மேற்கு வங்கத்தில் ராமர் கோவில்: மம்தா கட்சிக்கு பா.ஜ., பதிலடி
மேற்கு வங்கத்தில் ராமர் கோவில்: மம்தா கட்சிக்கு பா.ஜ., பதிலடி
ADDED : டிச 14, 2024 06:34 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்., - எம்.எல்.ஏ., ஒருவர் பாபர் மசூதி கட்டப்போவதாக தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடியாக, ராமர் கோவில் கட்டப் போவதாக மாநில பா.ஜ., தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள பெல்தாங்கா தொகுதியின் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., ஹுமாயுன் கபீர், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி போன்றதொரு மசூதியை தன் தொகுதியில் அமைக்க முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். அதற்கு பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 'அரசியல் ஆதாயத்திற்காக, சமூகத்தில் பிளவு ஏற்படுத்த அவர் முயற்சிக்கிறார்' என குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், பெல்தாங்கா மாவட்டத்தில் பெர்ஹாம்பூர் பகுதியில் ராமர் கோவில் கட்டப்போவதாக, மேற்கு வங்க மாநில பா.ஜ., தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறிய பா.ஜ.,வினர், 10 கோடி ரூபாய் மதிப்பில் கோவில் கட்டுவதற்கான பணி, அடுத்த மாதம் துவங்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.