sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

‛‛ராமர் கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கான அடையாளம்'': பிரதமர் மோடி பேச்சு

/

‛‛ராமர் கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கான அடையாளம்'': பிரதமர் மோடி பேச்சு

‛‛ராமர் கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கான அடையாளம்'': பிரதமர் மோடி பேச்சு

‛‛ராமர் கோயில் இந்தியாவின் ஒற்றுமைக்கான அடையாளம்'': பிரதமர் மோடி பேச்சு

15


UPDATED : ஜன 22, 2024 03:22 PM

ADDED : ஜன 22, 2024 03:11 PM

Google News

UPDATED : ஜன 22, 2024 03:22 PM ADDED : ஜன 22, 2024 03:11 PM

15


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அயோத்தி: ராமர் கோயில் இந்தியாவின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அடையாளம் என பிரதமர் மோடி கூறினார்.

Image 3532391

அயோத்தியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்த பின், பிரதமர் மோடி பேசியதாவது:

ராமர் கீதம்


மிகப்பெரிய முயற்சியால் ராமர் கோயில் சாத்தியமானது. ராமரின் ஆசிர்வாதத்தால், இந்த நிகழ்வு நடந்தேறி உள்ளது. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ஜன.,22ம் தேதியை யாரும் மறக்க மாட்டார்கள். கூடாரத்தில் இருந்த பாலராமருக்கு தற்போது அழகிய கோயில் கட்டப்பட்டு உள்ளது. கோயில் கட்ட ஆன தாமதத்தை ராமர் மன்னிப்பார் என நம்புகிறோம். ஒவ்வொரு கிராமத்திலும் இன்று ராமர் கீதம் ஒலித்து கொண்டு இருக்கிறது. அடிமைத்தனத்தின் அடையாளம் நீங்கி உள்ளது.

நியாயம் வென்றது


மிகப்பெரிய சட்டப்போராட்டத்தால் கோயில் சாத்தியமானது. நியாயம் வென்றது. யாரையும் வீழ்த்தியதால் கிடைத்த வெற்றி அல்ல. கண்ணியமாக கிடைத்த வெற்றி. கோயில் கட்ட காரணமான இந்திய நீதித்துறைக்கு நன்றி. இந்தியாவே இன்று தீபாவளி கொண்டாடி வருகிறது. நாட்டு மக்கள் மனதில் ராமர் குடியேறி உள்ளார். ஸ்ரீரங்கம், ராமநாத சுவாமி மற்றும் தனுஷ்கோடி சென்றது எனது பாக்கியம். ராமர் அரிச்சல் முனை சென்றபோது காலச்சக்கரம் மாறியது. நானும் அங்கு அதனை உணர்ந்தேன். ராமரின் பக்தர்களுக்கு நான் கடமைப்பட்டு இருக்கிறேன். பல நூற்றாண்டுகளாக அயோத்தி ராமருக்காக காத்திருந்தது.

புதிய சகாப்தம்


ராமர் கோயில் திறப்பின் மூலம், இந்தியாவில் புதிய சகாப்தம் மற்றும் நம்பிக்கை பிறந்துள்ளது. நூற்றாண்டு கால தியானங்களும், பொறுமையும் இன்று பலன் அளித்துள்ளது. ஒட்டு மொத்த நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ராமரின் சிறப்பு குணங்கள் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவியுள்ளது.

Image 1222335

ஒற்றுமைக்கான அடையாளம்


ராமர் கோயில் இந்தியாவின் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான அடையாளம். ராமர் நமக்கானவர் மட்டுமல்ல. உலகத்திற்கே உரியவர். ஆயிரம் ஆண்டுகளாக ராம ராஜ்ஜியம் நடந்து வருகிறது. சரியான பாதையை நோக்கி காலச்சக்கரம் சுழல துவங்கி உள்ளது. அயோத்தியில் ராமர் சிலையுடன், இந்திய கலாசாரமும் நிறுவப்பட்டுள்ளது.

விவாதப் பொருள் அல்ல


ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். ஆனால் மக்கள் அவரிடம் இருந்து பல நூற்றாண்டுகள் பிரிந்து இருந்தனர். அயோத்திக்கு வருகை தந்த பக்தர்களை வரவேற்கிறேன். ராமர் கோயில் கட்டினால் நாடு பற்றி எரியும் என சிலர் தவறாக பரப்புரை செய்தனர். ராமர் விவாதப் பொருள் அல்ல. அவர் ஒரு தீர்வு.

ராம நாமமே


ராமருக்கான அர்ப்பணிப்பு தேசத்திற்கான அர்ப்பணிப்பு என நாம் உறுதி ஏற்போம். அனைவரும் ஒன்று என கூறுவதற்கு ராமர் அடையாளம். இளைஞர்களின் முன் ஆயிரம் ஆண்டுகளுக்கான பாரம்பரியம் உள்ளது. உலக அரங்கில் இந்தியாவின் நேரமாக இந்த தருணம் மாறி வருகிறது. ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Image 1222336

உணர்வுபூர்வமான தருணம்


முன்னதாக, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பதாவது: நாங்கள் கட்ட நினைத்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்று தருணத்தில், நாட்டின் ஒவ்வொரு நகரமும், கிராமமும் அயோத்தியாக மாறியுள்ளது. மேலும் ஒவ்வொரு பாதையும் ராம ஜென்மபூமியை நோக்கிச் செல்வதாகத் தெரிகிறது.

500ஆண்டு காத்திருப்புக்கு பின், நம் அனைவருக்கும் இது ஒரு உணர்வுபூர்வமான தருணம்.

மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்காத சில உணர்வுகள் என் இதயத்தில் உள்ளன. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us