ராமர் கோயில் விவகாரம்: கட்சி அணுகுமுறையை கண்டித்து காங்., எம்.எல்.ஏ., ராஜினாமா
ராமர் கோயில் விவகாரம்: கட்சி அணுகுமுறையை கண்டித்து காங்., எம்.எல்.ஏ., ராஜினாமா
UPDATED : ஜன 20, 2024 06:28 AM
ADDED : ஜன 19, 2024 10:43 PM

ஆமதாபாத்: ராமர் கோயில் கும்பாபிஷேக விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த குஜராத் எம்.எல்.ஏ., சி.ஜெ., சவ்டா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
வரும் 22-ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் காங். தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அவர்கள் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து காங்., தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்த வருகின்றனர். இதில் காங்.கின் அணுகுமுறைக்கு கண்டனம் தெரிவித்து குஜராத் மாநிலம் மகேஷானா மாவட்டம் விஜாப்பூர் தொகுதி காங். எம்.எல்.ஏ., சி.ஜெ. சவ்டா தனது பதவியை ராஜினாமா செய்து சட்டசபை சபாநாயகர் சங்கர் சவுத்ரியிடம் கடிதம் வழங்கினார். ராமர் கோயில் விவகாரத்தில் தனது அனுகுமுறை பிடிக்கவில்லை என்று பா.ஜ.வில் இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

