'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் முழங்க அயோத்தியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் முழங்க அயோத்தியில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
ADDED : ஜன 01, 2024 11:40 AM

அயோத்தி: அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற லதா மங்கேஷ்கர் சவுக் என்ற இடத்தில் நள்ளிரவு கூடிய பொதுமக்கள் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷம் எழுப்பி, புத்தாண்டை வரவேற்றனர்.
உலகம் முழுவதும் நள்ளிரவு 12 மணி ஆனதும் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். அந்த வகையில் 2023ம் ஆண்டின் இறுதி நாளான நேற்று (டிச.,31) இரவு 11 மணியளவில் அயோத்தியில் உள்ள லதா மங்கேஷ்கர் சவுக் பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடி, புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். சரியாக 12 மணியை எட்டியவுடன் குழுமியிருந்த மக்கள் அனைவரும் 'ஹேப்பி நியூ இயர்' என்றும், 'ஜெய் ஸ்ரீராம்' என்றும் கோஷம் எழுப்பியும், செல்பி எடுத்தும், கேக் வெட்டி கொண்டாடியும் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
அயோத்தியில் இன்னும் 3 வாரத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் இந்த வருடத்தை ஸ்பெஷலாக கொண்டாடினர். நீரஜ் குப்தா என்பவர் தனது நண்பர்கள் இருவருடன் அயோத்திக்கு வந்துள்ளனர். அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டம் பற்றி கூறுகையில், ''நாங்கள் புனிதமான ராமர் பிறந்த இடத்தில் புத்தாண்டைக் கொண்டாட வந்துள்ளோம். ஜனவரி 1ல் நாங்கள் சரயு நதிக்குச் சென்று புனித நீராடி, சிவன் கோயிலுக்குச் சென்று பின்னர் ராமஜென்மபூமியில் ராமரின் ஆசீர்வாதத்தைப் பெறுவோம்'' என்றனர்.