ADDED : மே 30, 2025 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய பிரதேசத்தின் சித்ரகூட் பகுதியில் ஆன்மிக தலைவரும், மதகுருவுமான ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவின் ஆசிரமம் உள்ளது. இங்கு, ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி நேற்று முன்தினம் சென்றார்.
நாட்டில் தற்போது நிலவும் சூழல் குறித்து அவரிடம் தலைமை தளபதி எடுத்துரைத்தார். அப்போது, உபேந்திர திவேதிக்கு, ராம தீட்சை எனப்படும் ஆசியை ஜகத்குரு வழங்கினார்.
இதற்கு குரு தட்சணையாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டுத் தர வேண்டும் என ராமபத்ராச்சார்யா தரப்பில் கோரப்பட்டதாக கூறப்படுகிறது.

