ADDED : ஜன 14, 2024 11:44 PM
தங்கவயல்: அயோத்தியில் இம்மாதம் 22ல் ராமர் கோவில் திறப்பு விழாவின் போது தங்கவயல் ஆண்டர்சன் பேட்டை ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி திருக்கோவிலில், 10,000 பேருக்கு பூந்தி வழங்கப்படுகிறது.
ஆண்டர்சன் பேட்டை பி.எம். சாலையில் 200 ஆண்டுகள் பழமையான வைணவ கோவிலாக ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா மிக பிரமாண்டமாக இம்மாதம் 22ல் கொண்டாடப்படுவதால் நாடு முழுதும் அன்று பல கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
தங்கவயலில் ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி கோவிலில் இதன் தலைவர் சங்கர் ஏற்பாட்டில் ஜனவரி 22ம் தேதி ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி சுவாமிக்கு சிறப்பு ஆராதனை செய்யப் படுகிறது. 10,000 பேருக்கு இனிப்பு பூந்தி வழங்குகின்றனர்.
ராபர்ட் சன் பேட்டையில் உள்ள பிரிட்சர்ட் சாலை வாஜ்பாய் சதுக்கத்தில் ராமரின் பேனர் கட் அவுட் வைத்துள்ளனர். இதற்கு நேற்று பூஜைகள் செய்தனர்.