ADDED : ஜன 22, 2024 06:08 AM
மைசூரு: அயோத்தி ராமர் கோவில் திறப்பை ஒட்டி, மைசூரில் இன்று ராமாயண நாடகம் நடக்கிறது.
அயோத்தி ராமர் கோவில் திறப்பை ஒட்டி, கர்நாடகாவின் முக்கிய இடங்களில் ராமரின் பேனர்கள், சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். இந்நிலையில் ராமர் கோவில் திறப்பை ஒட்டி, மைசூரில் இன்று ராமாயண நாடகம் நடக்கிது.
இதுகுறித்து மைசூரு மாவட்ட நாடக சங்கத்தின் செயலர் மகாதேவ சுவாமி நேற்று கூறுகையில், '' அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படுவதன் மூலம், ராம பக்தர்களின் பல ஆண்டு கால கனவு நிறைவேற போகிறது.
''கோவில் திறப்பை ஒட்டி, நாளை (இன்று) காலை 10:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, மைசூரு டவுன்ஹால் ரங்கா அரங்கில், எங்களது நாடக சங்கத்தின் சார்பில், 'சம்பூர்ண ராமாயணம்' என்ற பெயரில் ராமாயண நாடகம் நடக்கிறது.
''இதற்கு எந்த கட்டணமும் இல்லை. பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன், ராமாயண நாடகத்தை பார்க்க வர வேண்டும்,'' என்றார்.