ரேசன் விநியோக ஊழல்: மேற்குவங்க அமைச்சர் பதவி பறிப்பு
ரேசன் விநியோக ஊழல்: மேற்குவங்க அமைச்சர் பதவி பறிப்பு
ADDED : பிப் 17, 2024 01:30 AM

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் ரேசன் விநியோகத்திட்டத்தில் நடந்த ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அம்மாநில அமைச்சர் ஜோதிப்ரியா மாலிக் பதவி பறிக்கப்பட்டது.
மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல் காங்.,முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் தொழிற்சாலை மறுசீரமைப்பு துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மாலிக்.
முன்னர் உணவு பாதுகாப்பு அமைச்சராக இருந்த போது , ரேசன் பொருட்கள் விநியோக திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
இதனை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது.இதில் நடந்துள்ள பண மோசடி வழக்கில்
அமைச்சர் ஜோதிப்ரியா வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.கடந்தாண்டு அக்டோபரில் ஜோதிப்ரியா மாலிக் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி கவர்னருக்கு அளித்த பரிந்துரையின் பேரில் ஜோதிப்ரியா மாலிக் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
அவர் வகித்த இலாகா பிர்பஹா ஹன்ஸ்தாவிடம் வழங்கப்பட்டது.