ரேஷன் முறைகேடு: மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை ரெய்டு
ரேஷன் முறைகேடு: மேற்கு வங்கத்தில் அமலாக்கத்துறை ரெய்டு
ADDED : ஜன 16, 2024 01:21 AM

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் ரேஷன் முறைகேடு வழக்கில் கைதான திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் சங்கர்ஆதியாவுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் அலுவலகங்களில் ஈ.டி. எனப்படும் அமலாக்கத்துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங். ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் போங்கான் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் ஆதியா. ஆளும் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த இவர் போங்கான் நகராட்சியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.இந்நிலையில் ரேஷன் முறைகேடு தொடர்பாக சங்கர் ஆதியா மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் கடந்த 5ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனைகளில் 8 லட்சம் ரூபாய் ரொக்கம்மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 17 மணி நேர சோதனைக்கு பின் சங்கர் ஆதியாவை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
இந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஆண்டு மாநில அச்சர் ஜோதிபிரியோ மாலிக் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு நெருக்க
மான சங்கர் ஆதியா கைது செய்யப்பட்டார்.
சங்கர் ஆதியாவுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். கோல்கட்டாவின் மத்திய பகுதி சால்க் ஏரியில் உள்ள கணக்கு தணிக்கையாளர் அலுவலகம் உட்பட 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஏற்கனவே அமலாக்கத்துறையினர் மீது திரிணமுல் காங். தொண்டர்கள் இருமுறை தாக்குதல் நடத்தியதையடுத்து சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.