ADDED : பிப் 18, 2024 11:09 AM

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்டடில் இருந்து திடீரென விலகிய இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் மீண்டும் அணியில் இருந்து இணைந்தார்.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடக்கிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் டெஸ்ட் அரங்கில் 500 வது விக்கெட் சாய்த்து சாதனை படைத்தார். இம்மகிழ்ச்சியில் இருந்த இவர், அடுத்த சில மணி நேரத்தில் இப்போட்டியில் இருந்து அவசர மருத்துவ காரணங்களுக்காக விலகினார்.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷா வெளியிட்ட செய்தியில்,' அஷ்வின் தனது குடும்பத்தினரின் அவசர மருத்துவ சிகிச்சை காரணமாக மூன்றாவது டெஸ்டில் இருந்து விலகினார். இந்த இக்கட்டான நேரத்தில் பி.சி.சி.ஐ., அவருக்கு முழு உதவியாக இருக்கும். ஏனெனில் வீரர்கள், அவரது குடும்பத்தினரின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது,' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அஷ்வின் மீண்டும் அணியில் இணைந்தார். 4ம் நாள் ஆட்டத்தில் அவர் களமிறங்க உள்ளார். இதனை பிசிசிஐ உறுதிப்படுத்தி உள்ளது. அஷ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.