ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பு அதிகரிப்பு: ஒரே வாரத்தில் ரூ.12,000 கோடி உயர்வு
ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பு அதிகரிப்பு: ஒரே வாரத்தில் ரூ.12,000 கோடி உயர்வு
ADDED : ஏப் 19, 2025 10:00 PM

புதுடில்லி: சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், ஏப்.,11 அன்றுடன் முடிந்த ஒரு வாரத்தில், ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பு மதிப்பு சுமார் 12 ஆயிரம் கோடி அளவு அதிகரித்து உள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையற்ற நிலை, அமெரிக்கா - சீனா இடையே நடக்கும் வர்த்தக போர் உள்ளிட்ட சர்வதேச வர்த்தக பதற்றம், அமெரிக்க டாலர் பலவீனமடைந்து வருவது காரணமாக, தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. இதனால், அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.11,986 கோடி அதிகரித்து உள்ளது. இதன் மூலம் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள மொத்த தங்க கையிருப்பின் மதிப்பு ரூ.6,88,496 கோடி ஆக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.