ADDED : மார் 27, 2026 03:53 AM

மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் விடுபட்ட 60 லட்சம் பெயர்களில், 30 லட்சம் பேர் மீண்டும் சேர்க்கப்பட்டால் கூட, அது திரிணமுல் காங்., அரசின் சாதனைதான். விடுபட்ட அனைவரும் உண்மையான வாக்காளர்கள். அவர்களுக்கு சட்டரீதியான தீர்வு கிடைக்க கட்சி எப்போதும் உதவும்.
மம்தா பானர்ஜி மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்கிரஸ்
காத்திருக்கும் மக்கள்!
மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், பிரசார உத்தியை மட்டுமே மத்திய பா.ஜ., அரசு நம்பியுள்ளது. பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட முக்கிய சவால்களை சமாளிக்க தவறிவிட்டது. சமையல் காஸ் சிலிண்டர் உட்பட அடிப்படை தேவைக்கு கூட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி
அவசரம் ஏன்?
பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு ஏன் அவசரம் காட்டுகிறது என தெரியவில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலுக்கு பின், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இது குறித்து விவாதித்து, பின் உரிய முடிவை எடுக்கலாம்.
மல்லிகார்ஜுன கார்கே காங்., தேசிய தலைவர்
