தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரசாரத்தால் யதார்த்தத்தை மாற்ற முடியாது; மத்திய அரசு திட்டவட்டம்

அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரசாரத்தால் யதார்த்தத்தை மாற்ற முடியாது; மத்திய அரசு திட்டவட்டம்

அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரசாரத்தால் யதார்த்தத்தை மாற்ற முடியாது; மத்திய அரசு திட்டவட்டம்


ADDED : செப் 23, 2026 05:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 23, 2026 05:01 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரசாரத்தை எவ்வளவுதான் திரும்பத் திரும்பக் கூறினாலும் இந்த யதார்த்தத்தை மாற்றிவிட முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில், இந்தியாவைப் பற்றிய தேவையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது. முற்றிலும் இந்தியாவிற்கு மட்டுமேயான உள்விஷயங்களில் கருத்துச் சொல்ல இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு எந்தத் தகுதியும் இல்லை.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய முழு யூனியன் பிரதேசங்களும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். அரசியல் உள்நோக்கம் கொண்ட பிரசாரத்தை எவ்வளவுதான் திரும்பத் திரும்பக் கூறினாலும் இந்த யதார்த்தத்தை மாற்றிவிட முடியாது. இதுபோன்ற உள்நோக்கம் கொண்ட பிரசாரத்தை மீண்டும் மீண்டும் ஆதரிப்பது, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் நம்பகத்தன்மை மீது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

பயங்கரவாதத்தை ஆதரிப்பதிலும் நிதியுதவி செய்வதிலும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றைக் கொண்ட பாகிஸ்தானுக்கு, தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொண்டு, அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களிலிருந்து தொடர்ந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அறிவுரை வழங்குவது சிறந்ததாகும். இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us